அலிசப்ரி ரஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அவரது உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்