இஸ்லாமியர்களின் திருமண சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்து தமக்கு வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெண்கள் தொடர்பிலும் விவாகம்,விவகாரத்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் தெளிவாக சட்டங்கள் வகுக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என தெரிவித்தார்.
தமது சமூகத்தினரின் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை விடுத்து தேச வழமை சட்டத்தில் உள்ள பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்குமாறு கூறியிருந்தார்.
தமது மார்க்கம் மற்றும் இஸ்லாமிய பெண் பிள்ளைகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என தமக்குத் தெரியும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் புகழைத் தேடுவதற்காக அர்ச்சுனா இஸ்லாமிய சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாக நலீம் சாடியிருந்தார்.