தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றின் ஏடிஎம் இயந்திரத்தில் இரண்டு இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹல்துமுல்ல பகுதிக்கு பயணித்த பேருந்தொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.