அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் , நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வெளிநாட்டு கடன்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்