அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய , 2ஆயிரம் கெப் ரக வானங்களை இறக்குமதி செய்ய பொது நிர்வாக , மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில அரச துறைக்கு கிட்டத்தட்ட 15 வருடங்களாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாக களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார் .
பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது .
இதேநேரம் வாகனங்களை வழங்குவதில் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.