புதிய ஜனாதிபதி தெரிவானதன் பின்னர், முதற் தடவையாக அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்த சபை கூடவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் இதன்போது அங்கீகரிக்கப்படவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு மேல் கடமையாற்றுவாராயின் அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.