-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா நேற்று செவ்வாய் கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ கோவையம்பதி பலானை கண்ணகை அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் கண்ணகியம்மனுக்கு 1008 பழங்களினாலான அலங்கார திருவாசியிலான மாலை அணிவிக்கப்பட்டு, அம்பாள் எழுந்தருளியா உள்வீதியுடாக வலம் வந்து பூத்தண்டிகை வாகனத்தில் வீற்று வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களு க்கு அருள்பாலித்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்