வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 07) கதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு வைபவம் இன்றாகும்.

இன்றைய இறுதிநாள் சடங்கு மற்றும் தீமிதிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளான பக்தர்கள் தீப்பாய்ந்து, அம்மனுக்குத் தங்களின் நேர்த்திக்கடன்களை மிகச் சிரத்தையுடன் நிறைவேற்றினர்.
குடிநீர் மற்றும் அன்னதானம் ஏனைய வசதிகள் அனைத்தும் ஆலய நிருவாக சபையினரால் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
