அமெரிக்காவின் ஒக்லோமாவில் உள்ள வைத்தியசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைக்குள் திடிரென பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறித்த வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.