அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களைப் புறக்கணிப்பதாக, தமிழக விருந்தக உரிமைகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா, 50% வரி விதித்துள்ளதை எதிர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக விருந்தக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியின் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களைப் புறக்கணிக்கப் போவதாக, தமிழக விருந்தக சங்கம் அறிவித்துள்ளது.