அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 33 மற்றும் 34 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மரதன்கடவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்