இலங்கையில் உள்ள சுகாதார அதிகாரிகள், புற்றுநோய் நோயாளிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) 21வது வருடாந்த கல்வி அமர்வுகளில் உரையாற்றிய சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபால, ஆண்களுக்கு மத்தியில் வாய் புற்றுநோயானது மிகவும் பொதுவானது எனவும், அதேவேளை மார்பக புற்றுநோயானது பெண்களுக்கான முன்னணி நோயறிதலாகவும் உள்ளது என்றார்.
உள்நாட்டிலும் உலக அளவிலும் புற்றுநோயின் பெருகிவரும் சுமையை எடுத்துரைத்த அவர், 2050 ஆம் ஆண்டில் உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் 77 வீதமாக அதிகரிக்கும் என்று எச்சரித்தார், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில்.
இந்த அதிகரிப்பை சமாளிக்க, புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துமாறு இலங்கையர்களை மஹிபால வலியுறுத்தினார்.
பெரும்பாலான புற்றுநோய் நிகழ்வுகளை வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும் என்றும், ஒரு சிறிய பகுதி மட்டுமே மரபணு காரணிகளால் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.