இந்தியாவின் வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
வந்தே பாரத் ரயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை இட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.
அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்