வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்று திங்கட்கிழமை 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த முன்னறிவிப்பானது இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும், பலத்த மின்னலும் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க