![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/0V2A1029_P1-600x375-1.webp)
யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்