மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

உகாண்டாவில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

40 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது.

ஆபிரிக்க நாடான உகாண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த சடலங்களை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.