மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை
இயேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட ஆராதனை இன்றைய தினம் புதன் கிழமை மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை விழா இடம்பெற்றது.
இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்