மட்டக்களப்பில் உறுமய தொடர்பான விசேட கலந்துரையாடல்

 

உறுமய தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களாக சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்ர் கொண்டிலுந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்