பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தல் : 8 தமிழர்கள் போட்டி

பிரித்தானியாவில் இன்று  வியாழக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார்.

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது.

எனினும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

650 உறுப்பினர்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்