பன்னீர் எப்படி செய்வது

பன்னீர் எப்படி செய்வது

பன்னீர் எப்படி செய்வது

💦அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டே 30 நிமிடத்தில் தயாரிக்கலாம்.

💦பெரும்பாலும் வணிக ரீதியாக விற்கப்படும் பனீர் சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் பனீர் தயாரிக்க  தயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

💦பனீரின் சுவையானது  பயன்படுத்தப்படும் அமில மூலப்பொருளைப் பொறுத்து அமையும். தயிரை பயன்படுத்தும்போது மென்மையான பனீர் கிடைக்கும். அதிக தயிர் பயன்படுத்துவது பனீருக்கு லேசான தயிர் சுவையை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:
  1. பால் 2 லிட்டர்
  2. எலுமிச்சை 2
செய்முறை:

💦எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடுபண்ணுங்கள். பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும்பி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடுங்கள். பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாலில் ஊற்றி விடுங்கள். பாலை கரண்டியால் நன்றாக கலக்கி கொண்டே இருங்கள்.

💦சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

💦3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பனீர் அழகாக ரெடி ஆகி இருக்கும். உங்கள் தேவைக்கு துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள். பனீர் துண்டுகளை இறுக்கமான டப்பாக்களில் அடைத்து பிரீஸரில் வைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

பன்னீர் எப்படி செய்வது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்