
நாட்டு நிலை காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாகவே, இவ்வாறு இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 30 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.