நாட்டின் பல பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மற்றும் ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் நாளை மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்