தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டம்: சுகயீனம் காரணமாக அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளவில்லை
-மன்னார் நிருபர்-
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளவில்லை.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கலந்து கொண்டு உரையாற்றினார்.