கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: சிறுவன் பலி

பதுளை பகுதியில் மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவங்கொடை, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த ரஷான் நிம்ஹாஸ் என்ற பாலர் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண், அவருடை தாய் மற்றும் இன்னுமொரு குழந்தை காயமடைந்து  மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க