ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

-யாழ் நிருபர்-

ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றன.

ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டதுடன் தேவாலயபிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.

உயிர்நீத்தவர்களுக்கான மெழுகுவர்த்தி யும் ஏற்றிவைக்கப்பட்டது

இதில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்