இந்திய மகளிர் அணி வெற்றி!

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 13.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர் 45 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி, 4.2 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 47 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க