ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

சில பகுதிகளில் வெள்ளப் பெருக்குகளும் பதிவாகியுள்ளன.

களு கங்கை மற்றும் வளவ கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மொரகெட்டிய, மாகுர உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு பதிவாகியுள்ளது.

எனவே ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்பாடுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்