அன்னையர் தினம் 2024

அன்னையர் தினம் 2024

அன்னையர் தினம் 2024

👩‍👧‍👧👩‍👧‍👧அன்னையர் நாள் என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபரின் தாய்இ தாய்மைஇ தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் தாக்கம் ஆகியவற்றைப் பெருமைப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாகும். இது உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறதுஇ பொதுவாக மார்ச் அல்லது மே மாதங்களில் கொண்டாடப்படுகின்றது.

2024 அன்னையர் தினம் எப்போது?

💗மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். இந்த ஆண்டு அன்னையர் தினம் மே மாதம் 12ஆம் திகதி கொண்டாடப்படும்.

அன்னையர் தின வரலாறு

💗அமெரிக்காவில் கடந்த 1908ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸ் என்பவர் முதன் முதலில் அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். தன்னுடைய சொந்த தாயாருக்காக அன்னையர் தினத்தை அவர் அனுசரித்தார். இவருடைய தாயார் ஆண் ரீவிஸ் ஜார்விஸ் சமூக சேவகியாக வாழ்ந்தவர். உள்நாட்டுப் போரில் காயம் அடைகின்ற ராணுவ வீரர்களுக்கு சேவை செய்வதை இவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

💗நாட்டுக்கும், வீட்டுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த தன் தாயாரை நினைகூரும் விதமாகத்தான் அன்னையர் தினத்தை அண்ணா ஜார்விஸ் கொண்டாடத் தொடங்கினார். அவரது முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு 1914ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது. அப்போது முதல், அன்றைய நாளை அன்னையர் தினமாக உலகெங்கிலும் கொண்டாடி வருகின்றனர்.

அன்னையர் தின முக்கியத்துவம்

💗உங்கள் அம்மாவிடம் அன்பு மற்றும் பாசமழை பொழிய இது தனித்துவமான நாளாகும். உங்கள் தாயாரின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தையும் இந்நாளில் நீங்கள் கௌரவிக்கலாம். அதேபோல, மறைந்த தாயாரின் நினைவுகளை போற்றுவதற்கு இது சிறப்பான நாளாகும்.

அன்னையர் தின பரிசுகள்
  • நாள் முழுவதும் நிற்க வேண்டிய தாய்மார்களுக்கு காலணிகள்.
  • இயற்கையை விரும்பும் தாய்மார்களுக்கு தோட்டப் பொருட்கள்.
  • கடிகாரமாக இருக்கும் தாய்மார்களுக்கான புதிய கடிகாரம்.
  • வீட்டு அலங்காரத்தில் அக்கறை கொண்ட தாய்மார்களுக்கு பிரேம்கள்.
  • பூக்களை விரும்பும் தாய்மார்களுக்கு ஒரு பூங்கொத்து அல்லது பானை மலர்.
  • தங்களை கவனிக்காமல் பிள்ளைகளுக்காக வாழும் தாய்மார்களுக்கு ஆடை.
  • சமையலறையிலே தன் வாழ்நாளைக் கழிக்கும் தாய்மார்களுக்கு சமையலறை பாத்திரங்கள்.
  • தாய்மார்களுக்குரிய பாவணைப் பொருட்கள்.
அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

🤝கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝அன்பின் மொழியை அறிமுகம் செய்யும். அற்புத கடவுள் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝அன்பு, அக்கறை. அரவணைப்பு. பாசம். நேசம். தியாகம் என எல்லா உணர்வுகளையும்
ஒரே இடத்தில் கொண்ட வாழும் கடவுள் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

🤝இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝பிடிவாதம் , வெறுப்பு, கோவம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கிய அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும், அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்.. அன்னையர் தின வாழ்த்துகள்.

🤝வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்.. அன்னையர் தின வாழ்த்துகள்.

அன்னையர் தினம் 2024

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்