அதிக வெப்பத்துக்கு காரணம் என்ன

இலங்கையில் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலப்பகுதியில்இ இதுபோன்ற நிகழ்வுகள் வழமையானதாக இருந்தாலும் அதிக வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆய்வுகளின்படி இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை இலங்கையில் வெப்பம் தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பல பிரதேசங்களில் வெப்பநிலை உயர்வாக காணப்பட்டதுடன், பொலனறுவையில் 36.6 பாகை செல்சியஸாகவும், வவுனியாவில் 35 பாகை செல்சியஸாகவும், வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்