தலைவராக ஸ்மிரிதி மந்தனா நியமனம்!
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய மகளிர் அணியின் தலைவராக ஸ்மிரிதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் உபதலைவராக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் அணித்தலைவி ஹார்மன்ப்ரீட் கவுருக்கு (Harmanpreet Kaur) ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்மிரிதி தலைமையிலான இந்திய மகளிர் அணியில் 15 பேர் அடங்குகின்றனர்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்