ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்காக அழைப்பு

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்கு தேவையான ஜனநாயக கோட்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்கு இணையுமாறு “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு” அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை 29.08.2023 காலை 9.30 மணி தொடக்கம் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு” அறிவித்துள்ளது.

தமது “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பை” தலைவர்கள், ஜனநாயகத்தை மதிக்கும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பல்வேறு வகையான சமூக அழுத்தக் குழுக்களின் செயற்பாட்டாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2022ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும்; பொருளாதார நெருக்கடி நாட்டின் அரசியல் தலைமைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் மேற்கொண்ட பலவீனமான ஆட்சியின் பெறுபேறாகும்.

பொருளாதாரத்துக்கு மீண்டும் உயிரூட்டும் செயற்பாடு உண்மையாகவும், நியாயமாகவும் இடம்பெறவேண்டுமாயின், அரசு நல்லாட்சியை உறுதிப்படுத்தி, ஜனநாயக கோட்பாடுகளுக்கும் பிரஜைகளின் உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், ஊழலுக்கு எதிராக செயற்படுதல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்குகூறலுடன் பணியாற்றுதல் என்பன அவசியமாகும்.

அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நாட்டின் பொது நலன்கருதி முன்னெடுக்க வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், அதற்கான எமது கலந்துரையாடல்கள் மற்றும் செயற்திட்டங்களை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தில் கூட்டிணைவு பெரிதும் பங்களிப்புச் செலுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும்.

பொருளதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை மதிக்கும், மிகவும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும்போது, இருக்க வேண்டிய ஜனநாயக உரிமைகளையும் கட்டமைப்புகளையும் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்காக எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கின்றோம்.

ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு சார்பில் பப்ரெல், தேசிய சமாதானப் பேரவை, சர்வோதய தேசோதய, சைல்ட் விஷன் உள்ளிட்ட 10 தேசிய தன்னார்வ அமைப்புக்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தரத்திலுள்ளோர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்கு தேவையான ஜனநாயக கோட்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்கு இணையுமாறு “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு” அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை 29.08.2023 காலை 9.30 மணி தொடக்கம் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு” அறிவித்துள்ளது. தமது “ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பை” தலைவர்கள், ஜனநாயகத்தை மதிக்கும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பல்வேறு வகையான சமூக அழுத்தக் குழுக்களின் செயற்பாட்டாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2022ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும்; பொருளாதார நெருக்கடி நாட்டின் அரசியல் தலைமைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் மேற்கொண்ட பலவீனமான ஆட்சியின் பெறுபேறாகும். பொருளாதாரத்துக்கு மீண்டும் உயிரூட்டும் செயற்பாடு உண்மையாகவும், நியாயமாகவும் இடம்பெறவேண்டுமாயின், அரசு நல்லாட்சியை உறுதிப்படுத்தி, ஜனநாயக கோட்பாடுகளுக்கும் பிரஜைகளின் உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், ஊழலுக்கு எதிராக செயற்படுதல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்குகூறலுடன் பணியாற்றுதல் என்பன அவசியமாகும். அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நாட்டின் பொது நலன்கருதி முன்னெடுக்க வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், அதற்கான எமது கலந்துரையாடல்கள் மற்றும் செயற்திட்டங்களை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தில் கூட்டிணைவு பெரிதும் பங்களிப்புச் செலுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும். பொருளதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை மதிக்கும், மிகவும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும்போது, இருக்க வேண்டிய ஜனநாயக உரிமைகளையும் கட்டமைப்புகளையும் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்காக எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கின்றோம். ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு சார்பில் பப்ரெல், தேசிய சமாதானப் பேரவை, சர்வோதய தேசோதய, சைல்ட் விஷன் உள்ளிட்ட 10 தேசிய தன்னார்வ அமைப்புக்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தரத்திலுள்ளோர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்