கல்வி பற்றிய சிந்தனைகள்

கல்வி பற்றிய சிந்தனைகள்

📙கல்வி என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.

📙அந்தவகையில் கல்வி சிந்தனை என்பது கோட்பாடுகளைத் தீர்மானிப்பதோ வகுப்பதோ அல்லஇ இது பல்வேறு துறைகளின் கண்ணோட்டத்தில் இருந்து கல்வி நடப்புகளையும் சிக்கல்களையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் வழிமுறையாகும்.

கல்வி சிந்தனைகள்
  • என்னை தலை குனிந்து பார், உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைக்கின்றேன்.
  • தொழில் இல்லாத நீரின்றி வாடும் மரத்தைப் போன்றது.
  • கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது.
  • கல்வி என்பது பல நூல்களை வாசிப்பது இல்லை. அடக்கம், ஒழுக்கம், அறம் மற்றும் நீதி இவற்றின் முன் மாதிரியாகும்.
  • கணிதம் என்பது சந்தோசத்தைக் கூட்டவோ, கவலையைக் கழிக்கவோ கற்றுத் தருவதில்லை. ஆனால் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்பதைக் கற்றுத் தருகின்றது.
  • கல்வி என்பது பெருமைக்காகத் தேடி பெருவது அல்ல, பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக்கொள்வதாகும்.
  • இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவன் எதிர்கால வாழ்வை இழந்தவன் ஆகிறான்.
  • எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
  • கல்வி என்பது தகவல்களை சேகரிப்பது அல்ல, அது சிந்திப்பதற்காக மூளையைப் பயிற்றுவிப்பது.
  • மனிதனுடைய முழு திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி.
  • நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருமித்து வளர்க்க வேண்டும்.
  • அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக் கொள்ளப் பயன்படும் கருவி கல்வியாகம்.
  • பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி உன்னை கைவிடாது கல்வி ஆபரணம் அல்ல ஆடையாகும்.
  • பளிங்குக் கல் அழகிய சிற்பம் ஆவது போல் கல்வியால் ஆன்மா சிறப்படைகிறது.
  • கல்வியின் பெரிய நோக்கம் அறிவு அல்ல செயல்.
  • கல்வியானது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல கல்வி தான் வாழ்க்கை.
  • கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது.
  • கற்பது கடினம் ஆனால் அதைவிடக் கடினம் கற்பதை மறப்பது

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்