இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முகாமில் உள்ள துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம் இருக்கின்றன.

38 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன, 35 துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம் இருக்கின்றன.

குறைந்த அரச செலவினத்தைக் கொண்ட பாதீட்டு ஆவணம் இந்த முறை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்