கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பெண் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் இது வரையில் கிடைக்கப்பெறவில்லை.