கொழும்பு தெஹிவளை – மவுண்ட் லவினியா பகுதியில் உள்ள சுவர்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தெஹிவளை – மவுண்ட் லவினியா பகுதியில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாததால் மக்கள் சுவர்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக தெரிவித்த அவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட தங்களது தேவையை பூர்த்தி செய்ய தெஹிவளை நிலையத்திலிருந்து கோட்டை ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
மேலும் இவ்வாறான சூழ்நிலையைத் தடுப்பதே தூய்மையான இலங்கைத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் இதன் போது தெரிவித்தார்.