-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் நேற்று சனிக்கிழமை தொண்டு நிறுவனம் ஒன்றினால் 20 சிறார்களுக்கு சத்து மா வழங்கப்பட்டது.
அந்த சத்து மாவினை பரிசோதித்த ஒருவர், அது தரமற்ற சத்து மா என சந்தேகமடைந்த நிலையில், அதனை அரித்து சுத்தம் செய்து பார்த்த போது, வழங்கப்பட்ட மாவில் நிறைய புழுக்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், சிறார்களிடமிருந்து அனைத்து சத்துமா பைகளையும் பெற்றுக்கொண்ட குறித்த நபர், அதனை ஊரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் வைத்துள்ளார்.
இதனை அறிந்த தொண்டு நிறுவனத்தினர், அவருடன் முரண்பட்ட பின்னர் அந்த சத்துமா பொதிகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம சேவகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக, குறித்த நபர் தெரிவித்துள்ளார்.