ஆறாம் வகுப்பு மாணவனை திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் பெற்ற ஆசிரியர்

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, ​​அவரது பெண் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். அதை விட ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆசிரியை அதே மாணவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தது தான்.

மேரி, வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் விஜி. இந்நிலையில் மேரிக்கு விஜி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் அந்த மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார் மேரி. அப்போது மேரிக்கு 34 வயது. மேலும், அவர் ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்ததும்இ மேரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும்இ விஜியுடனான உறவை மேரி தொடர்ந்துள்ளார். இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் மேரி.

விஜிக்கும் மேரிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இருவரும் பதினான்கு ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டனர். இல்லற் வாழ்க்கையில் இருந்து விலகிய பிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் மேரி உயிரிழந்தார். அவர்களது உறவு குறித்து விஜி கூறுகையில், மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது தான் தான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில்,மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாக கூறுகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி