
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் மனைவி உடலுறவு கொள்ளலாம்
வடக்கு நமீபியாவில் வசிக்கும் ஹிம்பா பழங்குடியினர் இன்றளவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றி வருகின்றனர்.
இன்று உலகம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளது. ஆனால் இந்த நவநாகரிக உலகிலும் பழமையான மரபுகளையும், வித்தியாசமான பழக்கங்களையும் சில பழங்குடி இன மக்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் வடக்கு நமீபியாவில் வசிக்கும் ஹிம்பா பழங்குடியினர் இன்றளவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றி வருகின்றனர். ஒவாஹிம்பா என்று அழைக்கப்படும் ஹிம்பா பழங்குடியினர் சுமார் 20,000 முதல் 50,000 பேர் வசிக்கின்றனர்.
தொற்றுநோய்கள், இனப்படுகொலைகள் மற்றும் தங்கள் நாட்டின் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளனர். ஹிம்பா பழங்குடியினரின் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பலதார மணம் :
ஹிம்பா பழங்குடியினர் பலதார மணத்தை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் இனத்தில் சராசரியாக ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். திருமணம் பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது, தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு பொருத்தமான குடும்பங்களை கவனமாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நடைமுறை பழங்குடியினருக்குள் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
விருந்தோம்பல்:
ஹிம்பா மக்களிடையே விருந்தோம்பல் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தாராள மனப்பான்மையின் அடையாளமாக, ஹிம்பா ஆண்கள் தங்கள் வருகை தரும் விருந்தினர்களுக்கு தங்கள் மனைவிகளில் ஒருவரை விருந்தாக்குவார்கள். அதாவது தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் மனைவியுடன் இரவைக் கழிக்க கணவர் அனுமதி வழங்குகிறார். விருந்தினரும் மனைவியும் ஒன்றாக இருக்கும் அந்த நேரத்தில் கணவர் மரியாதையுடன் வெளியில் இருப்பாராம்.
எனினும் விருந்தினர் தன் மனைவியுடன் ஒருவரின் வீட்டிற்கு வந்தால், ஓர் இரவுக்கு மனைவிகளை பரிமாறிக்கொள்ள ஒரு உடன்பாட்டை ஏற்று மனைவிகளை மாற்றிக்கொள்வார்களாம். .
ஹிம்பா பழங்குடியினத்தில் ஆண்கள் தங்கள் குடும்பத்தின் தலைவர்கள். பெண்களை விட அவர்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன. ஆண்கள் தான் பெரும்பாலான முடிவுகளை எடுக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்பத்தினருக்கு உணவு சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற பணிகளை பெண்கள் மேற்கொள்கின்றனர்.
இந்த நடைமுறை நட்பை வலுப்படுத்தும் என்றும் விபச்சார சம்பவங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக மக்கள் அதைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்
மேலும் அங்கு இருக்கும் தண்னீர் பற்றாக்குறை காரணமாக இந்த பழங்குடியின மக்கள் குளிப்பதில்லை. மாறாக சில நறுமணப் பொருட்களை கொண்டு அவர்கள் புகைக் குளியலை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்கள் உணவை தேடியே.தங்கள் நாளை செலவழிக்கின்றனர்.
ஹிம்ப பழங்குடியின மக்கள், தங்கள் கலாச்சார அடையாளத்தையும் வாழ்க்கை முறையையும் காப்பாற்ற முயற்சித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தங்கள் நாட்டின் நவீனமயமாக்கல் புதிய சவால்களை முன்வைக்கிறது, ஏனெனில் பழங்குடியினர் தங்கள் மரபுகள் மற்றும் நவீன உலகின் தாக்கங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.