பதிவற்ற மோட்டார் வாகனமும் ஐந்து வாழ்களும் பொலிஸாரால் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தின் வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப் பதிவு இன்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகநபரான நவாலி பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றபட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்