மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்
மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மயிலம்பாவெளி பகுதியில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் அருகே இருந்த வாய்க்காலில் விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.