-மஸ்கெலியா நிருபர்-
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட வலதளை பிரிவில், விறகு எடுக்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
ராஜகோபால் மணி (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை விறகு எடுக்க சென்ற குறித்த முதியவர், வீடு திரும்பவில்லை என நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடிய போது, தேயிலை மலையில் தேயிலை செடிகளுக்கு இடையில் அவர் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.
சடலத்தை மீட்ட பொலிஸார் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது, என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.