-கொழும்பு நிருபர்-
இலங்கையில் உள்ள 57 இலட்சம் குடும்பங்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் ரியூசன் வகுப்புக்களுக்காக வருடாந்தம் 12,100 – 12,200 கோடி ரூபாவை செலவிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய போட்டிக் கல்வி முறையின் விளைவாக பெற்றோர் தங்களது வருமானத்தில் 30 சதவீதத்தை பிள்ளைகளின் ரியூசன் வகுப்புக்களுக்கு செலவிடுவதாக கூறிய அவர், மாதாந்தம் அவர்களுக்கு 20,000 ரூபா செலவாவதாகவும் அதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள 57 இலட்சம் குடும்பங்களும் செலவிடும் தொகையைக் கணக்கிட்டால் அது 12,100 கோடி ரூபாவாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தெஹியோவிட்டவில் நேற்று புதன்கிழமை பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றி இராஜாங்க அமைச்சர் ரியூசன் கட்டணம் இன்று குடும்பங்களின் அத்தியாவசிய செலவினமாக மாறிவிட்டது.
மேலும் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுககு கல்விக்காக 546,00 கோடி ரூபாவை திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று தெரிவித்தார்.