துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பான அனர்த்தம் தொடர்பில், அனர்த்தத்தின் முழுமையான சேதம் தொடர்பில் இதுவரை முழுமையான மதிப்பீடு செய்யப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் இடம்பெற்று 100 மணித்தியாலங்களுக்கு மேலாகியும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே, துருக்கியின் Hatay நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவன் 79 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செய்தி வெளிநாட்டு ஊடகங்களில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், நகரின் குவிந்துள்ள இடிபாடுகளில் மேலும் பலர் உயிருடன் காணப்படலாம் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் பொதுமக்களின் கோபம் வரவிருக்கும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.