பாழடைந்து கவனிப்பாரற்று கிடக்கும் அரச கட்டிடம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமையப் பெற்றுள்ள அரச கட்டிடம் பல வருடங்களாக பாழடைந்து, காடு மண்டி கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் விடுதி கட்டிடமே இவ்வாறு காடு மண்டி பாலடைந்து காணப்படுகிறது.

இதனால் அருகாமையில் உள்ள குடியிருப்பாளர்கள் டெங்கு நோய் தாக்கத்துக்கும் உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த அரச கட்டிட வளாகத்தினுள் பற்றைக் காடு காணப்படுவதுடன் நுளம்பு பெருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில் அரச கட்டிடங்கள் பல திணைக்களங்களுக்கு குறைபாடாக காணப்படும் நிலையில் இவ்வாறான கட்டிடத்தை பயன்படுத்துவதன் ஊடாக கட்டிட குறைபாடுகளை தவிர்க்கலாம்.

இக் கட்டிட பகுதியில் கால் நடைகளின் மேய்ச்சல் தளமாக மாறியுள்ளதுடன் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்கின்றது.

எனவே இக் கட்டிடத்தை பாவனைக்கு உகந்த வகையில் பயன்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.