இரு குழுக்களிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இரு கும்பல் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மோதிக்கொண்டுள்ளது.

வாகனங்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து பின்னர் வாள்களால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிந்திய திரைப்படங்களில் காட்டப்படும் விதத்தில் சிறிய லொறி, சிறிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த நால்வர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யாழ்.பகுதியில் கொள்ளை, தாக்குதல், மக்களை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவர்களுக்குள் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.