நோயாளியை காப்பாற்ற வீட்டில் அணிந்திருந்த ஆடையுடன் ஓடி வந்த மருத்துவர்

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று அந்த நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி பாலித ராஜபக்ஷவே இந்த பணியை செய்துள்ளார்.

கவலைக்கிடமான நோயாளர்கள் மூவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் குறித்த மருத்துவர் உடனடியாக அங்கு சென்றுள்ளார்.

அவர் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றதன் காரணமாக தனது மூக்கு கண்ணாடியையும் மறந்துவிட்டு வந்ததுடன், பிறிதொருவரின் கண்ணாடியை தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மருத்துவ பணிக்காக அணியும் ஆடைகளை அணிவதற்கான நேரத்தையும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் செலவிட்டுள்ளார்.

நோயாளிகளின் தேவை கருதி உடனடியாக வீட்டில் இருந்தவாறு கட்டைக் காற்சட்டை மற்றும் மேலாடையுடன் தான் மருத்துவமனைக்கு சென்றதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.