தற்போது துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு வரை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் இருப்பதாகவும், அவர்களில் 8 பேர் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த 9 பேரில் ஒருவர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் முன்பு இருந்ததாகவும், ஆனால் இந்த சம்பவத்தின் போது அவர் அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள இலங்கை தூதரக பிரிவினர் இலங்கையர்கள் குறித்து தகவலை பெற்று வருகின்றனர்.