நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இவ்வாறான மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.