இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் சீரான வானிலையில் மாற்றம் எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறியளவில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை காணப்படும்

ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.