முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவிற்கான பிரதிநிதி நியமனம்

-யாழ் நிருபர்-

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக நேற்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும். எஸ். அமுனுகம வழங்கி வைத்தார்.

மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் திரு.ஆனந்தம் இரத்தினகுமார் தனது இந்த நியமனத்தினூடாக தாம் செயற்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக தனது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்